திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 16-ம் தேதி தேர்தல் நடந்தது. திரிபுராவில் 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இதில், திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 40 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக- திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.
காங், கம்யூ கூட்டணி 14 இடங்களிலும், மாநில கட்சியான திமோக 11 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.திரிபுராவில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைகிறது.
நாகாலாந்து ஆளும் பாஜக 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த மாநிலத்திலும் தொடர்ந்து பாஜக கூட்டணி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேகாலயாவில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா(முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் சங்மா மகன்) தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின. அதன்படியே மேகலாயாவில் தற்போதைய நிலவரப்படி ஆளும் தேசிய மக்கள் கட்சி28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் பாஜக4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
1