ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கி நடந்து வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்22,746வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு6,497வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிமுக வேட்பாளரை விட சுமார் 16 ஆயிரம் வாக்குகள், அதாவது 3 மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பயணத்தை தொடங்கி உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 514 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 90 வாக்குகளும் பெற்றிருந்தனர். தற்போது வரை 2 சுற்றுகள் தான் முடிந்து உள்ளது. இன்னும் 13 சுற்றுகள் எண்ணப்பட வேண்டியது உள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை திரும்ப பெற வேண்டுமானால் பதிவான வாக்குகளில் 6ல் 1 பங்கு வாக்குகள் பெற வேண்டும். அப்படிபார்த்தால் குறைந்தபட்சம் 28ஆயிரத்து 400 வாக்குள் பெறாதவர்கள் டெபாசிட் காலியாகி விடும். அந்த வகையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு மயிரிழையில் டெபாசிட் இழப்பில் இருந்து தப்புவார் என தற்போதைய நிலவரம் கூறுகிறது. நாம் தமிழர், தேமுதிக கட்சிகள் வழக்கம் போல டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளனர்.