வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை ஆயுள் காலம் முடிவடைந்ததால் அங்கு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. 60 இடங்கள் கொண்ட திரிபுராவில் பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட் கூட்டணி 22 இடங்களிலும், திப்ரா என்ற மாநில கட்சி 11 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. இங்கு ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருந்தது. இப்போது மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் நிலையில் உள்ளது.
அதுபோல60 இடங்கள் கொண்ட மேகாலயாவில் பாஜக 10 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும், என்பிபி என்ற மாநில கட்சி 22 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.
60 உறுப்பினர்கள் கொண்ட நாகாலாந்தில் பாஜக அமோகமாக முன்னணியில் உள்ளது. அதாவது 50 இடங்களி எனவே இங்கு பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.என்பிஎப் என்ற மாநில கட்சி 6 இடங்களிலும் முன்னியில் உள்ளது.