ஈரோடு கிழக்குத்தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. முதல் சுற்று இன்னும் முடிவடையாத நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்11,023 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு 3,718 வாக்குகள் பெற்றிருந்தார். மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்பட வேண்டியது உள்ளது. முதல் சுற்று முடிவடையாத நிலையிலேயே காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிமுக வேட்பாளரை விட 7ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பயணத்தை தொடங்கி உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 376 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 87 வாக்குகளும் பெற்றிருந்தனர்.