ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும்.
இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர். இன்று . காலை 8 மணிக் சித்தோடு அரசு பொறியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான எச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடந்தது. 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக 16 மேஜைகள் போடப்பட்டு உள்ளன.
16 மேஜைகளில் முதலில் சில மேஜைகள் முடிவுமட்டும் கிடைத்தது. அதன்படி தபால் ஓட்டுக்களையும் சேர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 4,953 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 1,603வாக்குகளும்., நாம் தமிழர் கட்சி119, தேமுதிக 49 வாக்குகளும் பெற்றிருந்தனர். முதல் சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியாக இன்னும் அரைமணி நேரம் ஆகும் என தெரிகிறது.