ஆந்திராவில் இருந்து நாமக்கல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சமயபுரம் சுங்க சாவடி பகுதியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து நாமக்கல் வழியாக சென்னை நோக்கி வந்த ஆல்டோ காரை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததால் தீவர சோதனையிட்டதில் பண்டல் பண்டலாக கஞ்சா மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 4. 20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 42) கார்த்திக (வயது 37 ) ஆகிய 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.