திருச்சி மாவட்டம், மணப்பாறை சாலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணித்த விஜயராணி (32), மகன் வினோத் (2) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே போல் மணப்பாறையில் அரசு பேருந்தில் பயணித்த ஜேம்ஸ் சந்தியாகு (40) என்பவரும் விபத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து உயிரிழந்த குடும்பத்தினர் குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககணி கடந்த மாதத்தில் 3 பேர் உயிரிழப்பிற்கு
இழப்பீடு தொகையாக மொத்தம் ரூ.42, 34, 016 வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
அதன் பிறகும் குறித்த காலத்தில் உரிய இழப்பீடு தராததால் குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முகக்கனி உத்தரவின் பேரில், குளித்தலை பேருந்து நிலையம் வந்த மூன்று அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட 3 அரசு பேருந்துகளும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டன.