தமிழக கட்டடத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநில தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கிடுகிடுவென உயரும் சிமெண்ட், ஜல்லி, மணல் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை, தமிழக அரசு கட்டுப்படுத்திட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு (ESI) (BF) திட்டத்தினை
அமுல்படுத்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளிடம் கூறிய கட்டட தொழிலாளர் சங்க மாநில தலைவர் துரைராஜ், மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு தனி அமைச்சர் உள்ளது போல் கட்டட தொழிலாளர்களுக்கு தனி அமைச்சர் ஏற்படுத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.