தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உ்ளளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் பிறந்தநாள் கொண்டாடினார். மேலும் முகாம் அலுவலகத்தில் டி.வி.எஸ். குழும நிறுவனங்களின் தலைவர்
வேணு ஸ்ரீனிவாசன் , மாநில திட்டக்குழு உறுப்பினரும், TATT நிறுவனத்தின் தலைவருமான மல்லிகா சீனிவாசன் ஆகியோர் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், திரைப்பட நடிகர் நாசர் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரங்கன்றுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.