புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு பயிலும் 1377 மாணவ,மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது..
விழாவில் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி பேசியதாவது: ஜனவரி 13 ல் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ,மாணவியருக்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை
விரிவுபடுத்தியுள்ளார்
அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி,சந்தைப்பேட்டை,போஸ்நகர்,மாலையீடு,மச்சுவாடி,சாந்தநாதபுரம்,பிள்ளை தண்ணீர் பந்தல்,சமத்துவபுரம்,தைலாநகர்,அசோக்நகர்,அன்னச்சத்திரம் ஆகிய 11 பள்ளிகளில் உள்ள 1137 மாணவ,மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
விழாவில் ,துணைத் தலைவர் லியாகத் அலி,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், தாசில்தார் விஜயலட்சுமி,நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சேகரன்
வட்டாரக் கல்வி அலுவலர்கள் செங்குட்டுவன்,அருள்,பிரியா,பள்ளித்துணை ஆய்வாளர் குருமாரிமுத்து ,இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் முனியசாமி,ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முனியசாமி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்,பெற்றோர் கலந்து கொண்டனர்.