ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடந்தது. 82,138 ஆண்களும், 88,37 பெண்களும் வாக்களித்தனர். 17 இதர வாக்காளர்களும் வாக்களித்தனர். மொத்தம் 1லட்சத்து 70ஆயிரத்து 192 பேர் வாக்களித்து உள்ளனர். இது74.79% வாக்குப்பதிவு ஆகும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் பலத்த பாதுகாப்புடன் வாக்குபதிவு எந்திரங்கள் சீல்வைக்கப்பட்டுஓட்டு எண்ணும் இடமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை(வியாழன்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொட்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.ஓட்டு எண்ணுவதற்காக 16 மேஜைகள் போடப்பட்டு உள்ளது. 16 மேஜைகளிலும் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதும் முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு மொத்தம் 15 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு டேபிளிலும் ஒரு சுற்றுக்கே 5 எந்திரங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட வேண்டும். பின்னர் அவை தனித்தனியாக ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்த ஓட்டுக்களை எண்ண வேண்டும்.
இப்படி ஒவ்வொரு சுற்றிலும் 77 வேட்பாளர்களின் ஓட்டு விவரங்களையும் எண்ண வேண்டியது இருப்பதால் ஒட்டு எண்ணிக்கை முடிவடைய கால தாமதம் ஆகலாம் என தெரிகிறது. ஆனாலும் முதல் ற்று முடிவுகள் 9.15 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நாளை (2-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.
அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.