அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் கடந்த 6 மாத காலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை அவதூறாக பேசுகிறார். அவர் காரல் மார்க்ஸ் பற்றி பேசியது மிகவும் கடுமையான கண்டனத்துக்குரியது ஆளுநர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் தொடர்ந்து தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவும் தமிழ் மக்களின் உணர்வுக்கு எதிராகவும் பேசி வரும் ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜா பெரியசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.