தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது “உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக் கூறி அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சென்னை, கிண்டியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினனுக்கு அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் நெஞ்சம் நெகிழும் அன்பும் வாழ்த்துகளும் தெரிவித்தனர்.