திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதன்காரணமாக அன்பில், கீழ அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். இன்று முதல் வரும் மார்ச் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
Tags:தடை உத்தரவு