காரல் மார்க்ஸ் குறித்த தமிழக ஆளுநரின் அவதூறைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் பாரதி தலைமை வகித்தார். பாபநாசம் ஒன்றிய செயலர் சேகர், மாவட்ட முன்னாள் துணைச் செயலர் பரமசிவம் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத் துணைச் செயலர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஏஐடியூசி மாவட்டச் செயலர் தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் தர்மராஜன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ராமச்சந்திரன், மாதர் சம்மேளனத்தின் மாவட்ட செயலர் கண்ணகி உட்பட பலர் கலந்துக் கொண்டனர், இதில் பங்கேற்றவர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.