மழைகாலங்களில் வெள்ளநீர் தேங்குவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.162.90 கோடி தமிழக முதல்வரத் ஒதுக்கி உள்ளார். இந்த நிதியில் இருந்து திருச்சி மாரீஸ் ரயில்வே பாலத்தை சீரமைத்து அகலப்படுத்த ரூ.34.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணி முடிக்கப்பட்டால், தில்லைநகர், உறையூர் மார்க்கத்தில் இருந்து மெயின்கார்டு கேட் செல்லும் பஸ்கள் இடையூறு இன்றி செல்ல முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் .