திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பொன்னர் சங்கர் கோயிலில் மாசி திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்து தங்கி இருந்து விழா முடிந்ததும் தங்கள் ஊர்களுக்கு செல்வார்கள்.
இந்த விழாவில் கலந்து கொள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து பக்தர்கள் ஒரு காரில் வந்தனர். இந்த கார் இன்று அதிகாலை பரமத்தி வேலூர் அருகே வந்தபோது முன்னால் நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 5 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். டிரைவர் உள்பட 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.