உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மசூரி பகுதியில் செயல்படும் பிரபல ஓட்டலில் திருமண பார்ட்டி நடந்தது. ஓட்டலுக்கு வந்தவர்கள் நள்ளிரவில் ‘டிஜே’ பாடலுக்கு (வெவ்வேறு இசைக்கருவிகளை பயன்படுத்தி இசைக்கப்படும் இசை) ஆட்டம் போட வேண்டும் என்று விரும்பினர். அதற்காக ஓட்டல் உரிமையாளரிடம் ‘டிஜே’ பாடலை ஒலிபரப்பச் செய்யும்படி கேட்டனர். ஆனால் அவர் டிஜே பாடலை ஒலிபரப்பச் செய்யவில்லை. அதனால் ஆத்திரமடைந்த விருந்தினர்களுக்கும், ஓட்டல் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. தொடர்ந்து ஓட்டலில் பணியாற்றும் 20 பேர், விருந்தினர்களை குச்சிகளால் அடித்து தாக்கினர். சிலருக்கு மண்டை உடைந்தது. மோதலை தடுத்துவிட சென்றவர்களுக்கும் அடி விழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தில் 5 பேருக்கு பலமான காயமும், 20க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.