மயிலாடுதுறையில் தமிழ்நாடு நரிக்குறவர் குருவிக்காரர் பழங்குடியினர் நல பேரவையின் கல்வி பொருளாதார மேம்பாடு விளக்க மாநில கூட்டம் விஜய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார், 14 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.
70 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எஸ்டி உரிமையை பெற்றுத்தந்த மாநில அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், நரிக்குறவர் இனமக்களது எஸ்டி உரிமை முழுமைபெற பேரவையினர் திட்டமிடுதலில் இறங்கியுள்ளதாகவும் கல்விக்குழு, பொருளாதாரக்குழு, அடிப்படை வசதிக்கான குழு, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்குழு உரிமைகள் பாதுகாப்புக்குழு என அமைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
எஸ்டிக்கான சலுகையை முழுமையாகப் பெறுவதற்கு நரிக்குறவர் இன மக்களுக்கு எஸ்டி சான்றிதழை உடனடியாக அளித்தால் கல்வி வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் நரிக்குறவ இன மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் எனவும் கொரோனா காலத்தில் கட்ட முடியாமல் போன வங்கிக் கடன்சுமையை தள்ளுபடி செய்ய வேண்டும். எஸ்டிக்கான . முதல் சான்றிதழை தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாளன்று வழங்கினால் காலா காலத்திற்கும் மறக்காத நினைவாக அதுஇருக்கும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.