Skip to content
Home » திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் சுருண்டு விழுந்து மரணம்…..

திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் சுருண்டு விழுந்து மரணம்…..

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்யம் (வயது 19). இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இசை நடனம் என திருமண வரவேற்பு நிகழ்ச்சி களை கட்டியது. இதனால் வாலிபர் முத்யம் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார். அப்போது விருந்தினர்கள் முன்னிலையில் ஒரு பிரபலமான இசைக்கு நடனமாடினான். இதனை உறவினர்கள் வெகுவாக ரசித்தனர். மேலும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். நடனமாடிக்கொண்டிருந்த போது, முத்யம் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். விருந்தினர்கள் அவரை பைன்சா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வாலிபர் நடனமாடி மயங்கி விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. 4 நாட்களில் தெலுங்கானாவில் இதுபோன்ற 2-வது சம்பவம் நடந்துள்ளது. பிப்ரவரி 22-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது 24 வயது போலீசார் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். இந்த சம்பவங்களால் தெலுங்கானாவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *