அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இன்று டில்லி சென்றார். .டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களை அமைச்சர் உதயநிதி சந்தித்து பேகிறார், பின்னர் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அவருடன் ஆ.ராசா எம்.பியும் டில்லி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து தனது துறை ரீதியான கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை அவர் சந்தித்து பேச இருக்கிறார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பார் என தெரிகிறது. மேலும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார்.