புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது.
அதனைத்தொடர்ந்து நேற்று காலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி திருவப்பூர் கவினாடு கண்மாய்பகுதியில் நடைபெற்ற து.
புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், தஞ்சை, திருச்சி என வெளி
மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான காளைகள் பங்கேற்றன. தொழுவத்தில் இருந்து
வெளியேறிய காளைகள் அருகில் உள்ள கவினாடு கண்மாய்க்குள் இறங்கியது. இதனைத்தொடர்ந்து அரைமணிநேரம் மஞ்சுவிரட்டு நிறுத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து காளைகளை கண்மாய்க்குள் இருந்து வெளியேற்ற முயன்றனர். அப்போது காளைகள் இங்கும், அங்குமாக நீந்தியபடி கண்மாய்க்குள் நீந்தியது.இதில் ஆலங்குடி அருகில் உள்ள கடுக்கா காடு கிராமத்தைச்சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான காளை தண்ணீருக்குள் மூழ்கி இறந்துபோனது. இச்சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.