Skip to content
Home » ஈரோடு… அதிமுக டெபாசிட் இழக்கும்….. அமைச்சர் நேரு பேட்டி

ஈரோடு… அதிமுக டெபாசிட் இழக்கும்….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

திருச்சி உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10 வது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் ரூ.23.35 லட்சம்  மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளையும்,பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தையும்பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்,

அதைத்தொடர்ந்து அமைச்சர்நேரு நிருபர்களிடம் கூறியதாவது:

அனைவருக்கும் குடிதண்ணீர் கொடுக்கவும் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போதும் பொதுமக்களுக்கு சில அசெளகரியம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் நீண்ட கால தீர்வுக்கு அதுதான் வழி .

வேறு  பணிக்கான ஒப்பந்ததாரர்கள் போல் இதற்கு அதிகமாக ஒப்பந்ததாரர்கள் வருவதில்லை இருக்கிறவர்களை வைத்துதான் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதுதான் நிலைமை.

ஏற்கனவே உள்ள மூன்று கூட்டுக் குடிநீர் திட்டம் டாக்டர் கலைஞர் கொடுத்த கூட்டு குடிநீர் திட்டம் ஆகும்.  விரிவுபடுத்தப்ப மாநகராட்சி பகுதிகளிலும்  24 மணி நேரமும் குடிநீர் வசதி பாதாள

சாக்கடை பணி ,சாலை பணிகள் நிச்சயமாக செயல்படுவதற்க்கு எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காலையில் கூட விசாரித்தேன் கைச்சின்னத்திற்கு வாக்களிக்க கூடிய மக்கள் வந்து வாக்கு சீட்டு வாங்கிச் செல்வதை  பரவலாக காணமுடிந்ததாக  கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் கைச்சின்னம் வெற்றி பெறும் என நம்பிக்கை இருக்கிறது.நிச்சயமாக வெற்றி பெறும்.மார்ச்1ம் தேதி முதல்  3ம் தேதிக்குள் கண்டிப்பாக திறந்து விடப்படும்.

வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை அழிந்து விடுகிறது என அதிமுகவினர் சொல்வது ஒரு கணக்கா? வாக்காளருக்கு வைக்கக்கூடிய மை எப்படி அழியும். அவர்கள் தோல்வி பயத்தில் அப்படி சொல்கிறார்கள்

அதிமுக டெபாசிட் இழக்கும் என தமிழ்நாடு முதல்வர் தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்,  ஈரோடு தொகுதி நிலைமை  அப்படிதான் உள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் ,திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம்,மத்திய மாவட்ட பொறுப்பாளர்  வைரமணி, மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *