ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள். 9 மணி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 10.10% வாக்குகளே பதிவாகி உள்ளது.
அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு 2 மணி நேரத்தில் 13.37 % வாக்குகள் பதிவாகி உள்ளது. மேகாலயா சட்டசபை, நாகாலாந்து சட்டசபைகளுக்கு பொது்தேர்தல் நடக்கிறது. மேகாலயாவில் 12.06%, நாகாலாந்தில் 15.76% வாக்குகள் பதிவானது.
ஈரோடு கிழக்கில் ஏன் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது என்பது குறித்து கேட்டபோது இங்கு 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதற்காக 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்கள் தங்களது வேட்பாளர்கள் பெயர் எந்த எந்திரத்தில் இருக்கிறது என தேடி கண்டுபிடித்து வாக்களிக்க வேண்டியது இருப்பதால் வாக்குப்பதிவு வேகமாக நடைபெறவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக வேட்பாளர் தென்னரசு கல்லுபிள்ளையார் கோவில் வாக்குச்சாவடியில் இன்று காலை 9.30 மணி அளவில் வாக்களித்தார்.