டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் அலுவலகம் மற்றும் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களைப் பெற்று பதிவு செய்வர் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 2ம் கட்ட விசாரணைக்கு சிபிஐ முன் மணிஷ் சிசோடியா ஆஜராகினார். அவரிடம் 8 மணி நேர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.