சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.. : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (26-02-2023) இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 27-02-2023 முதல் 01-03-2023 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும். 02.03.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.