தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதிமொழி வாசித்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகளும், தஞ்சை புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300 மாடுபுடி வீரர்களும் பங்கேற்கின்றனர். 12 சுற்றுகலாக போட்டி நடைபெறும். மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ள வீரர்களுக்கு மட்டுமே அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.