திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள பிஷப் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் பிளஸ் 2 மாணவர்கள் 16 பேர் கொண்ட குழுவினர் இன்று நண்பகலில் முக்கொம்பு மேலணையில் சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ளனர் – மேலும் தற்போது காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்து இருப்பதால் குளிப்பதற்கு திட்டமிட்ட மாணவர்கள் ஒன்றாக காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக கௌதம்(17) என்கிற மாணவன் ஆழமான பகுதியில் சிக்கினார். அப்போது செய்வதறியாது திகைத்த சக மாணவர்கள் கௌதமை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை – இதனை அடுத்து கூச்சலிடவே … அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர் – அப்போது நீரில் மூழ்கி கௌதமன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
Tags:பிஷப் பள்ளி