அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாநில குழு உறுப்பினர் வாலண்டினா கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வழங்கி வந்த உர மானியம்,உணவு மானியத்தை நிறுத்தியதை கண்டித்தும்,
கிராமப்புறங்களில் விவசாய தொழிலாளர்களை பாதுகாத்து வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியதை கண்டித்தும், போதுமான நிதி ஒதுக்கிட வலியுறுத்தியும்,
எல்ஐசி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மோசடி செய்த அதானியை கைது செய்து,அதானி சொத்துக்களை முடக்கிட கோரியம்,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.