கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றின் அருகே பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. திருச்சி மாவட்டம் வீரப்பூரில் புகழ்பெற்ற பொன்னர் சங்கர் ஆலயத்தில் இன்று முதல் வளநாடு திருவிழா,படுகளம், வெடபரி திருவிழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நாமக்கல், ஈரோடு,திண்டுக்கல், திருப்பூர் சொல்லிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொன்னர் சங்கர் ஆலயத்தில் வழிபட வருகை புரிந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள
செல்லாண்டி அம்மன் வழிபடுவதற்கு காவிரி ஆற்றின் புனித நீராடி அம்மனை வழிபட்டு, அதன் பின்னர் பொன்னர் சங்கர் ஆலயத்திற்கு செல்வதற்காக ஆயிரம் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட உள்ளதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவலர் கடைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.