தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரி சங்கம், கும்பகோணம் சக்தி ரோட்டரி சங்கம் இணைந்து பாபநாசம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவிகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சியை நடைபெற்றது. 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எவ்வாறு கையாழ்வது என ஊக்குவிக்கும் நிகழ்ச்சி, மற்றும் மாணவிகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கீதா, காயத்ரி ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில் பள்ளித் தலைமையாசிரியர் நீலா தேவி, ரோட்டரி உதவி ஆளுநர் ராஜ்குமார், பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன், செயலர் சிலம்பரசன், சக்தி ரோட்டரி சங்கத் தலைவர் மைதிலி, செயலர் மித்ரா, பத்து, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.