திருச்சி வண்ணாங்கோவில் அருகே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனியார் தார் உற்பத்தி ஆளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தார் உற்பத்தி ஆலையில் அவ்வபோது மிகவும் கடுமையான புகை மூட்டத்துடன் சுவாசிக்க முடியாத கரும்புகை வெளி வருகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது உடன் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக வண்ணாங் கோயில் திருநகர் பகுதியில் வசிக்கும் இரண்டு
சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அவர்கள் திருச்சி ஜிஎச்-க்கு அழைத்து வரப்பட்டனர்.
இதில் 3 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மற்றவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் அப் பகுதியில் உள்ள அரசியல் தலைவர்களை சந்தித்து எத்தனையோ முறை கோரிக்கை மனுவை கொடுத்த போதிலும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து இந்த தார் சாலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது