ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றிரவு விமானம் மூலம் கோவை வந்தார். விமானநிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மேயர் கல்பனா , துணை மேயர் வெற்றிச்செல்வன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், , கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதல்வர் இன்று ஈரோடு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இரவு மீண்டும் விமானம் மூலம் சென்னை செல்கிறார்..