சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு நாளும் வானிலை முன் அறிவிப்பை அறிக்கையின் வாயிலாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 24.02.2023 முதல் 16.02.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகிற 27 மற்றும் 28ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. அதிகபட்சவெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சவெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.