திருச்சி மாவட்டம், ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகையநல்லூர் ஊராட்சி சார்பில் ஆனைகல்பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது முன்னிலை திருவாளர்கள் துணைத் தலைவர் பூங்கொடி கண்ணன், வார்டு உறுப்பினர்கள் ஜெகநாதன், கே ஆர் கணேசன்,கே ஆர் கே குமார், பத்மாவதி, ராதிகா, ரஞ்சனி வான்மதி,தனசேகரன், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை
வைத்தனர். கூட்டத்தில் நாகைநல்லூர் கருங்காடு கவரப்பட்டி, கரட்டுப்பட்டி, பெரிய நாச்சிப்பட்டி , ஆனைகல்பட்டி, நானாபட்டி, கொங்கம்பட்டி,கல்லூர் பட்டி, மாமரத்துப்பட்டி, திம்மநாயக்கன்புதூர் கோழிச்சம்பட்டி புதூர் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வட்டார வள பயிற்றுநர் வீரகுமார் கலந்துகொண்டு சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து விளக்கமாக பேசினார். இதில் ஊராட்சி நிர்வாகம் தூய்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்று இருக்க வேண்டும். அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் உறுதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை எடுத்துரைத்து மக்களிடம் பேசினார் நிகழ்ச்சியில் முடிவில் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.