புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சி, நீலியம்மன் கோவில், ஆதிதிராவிடர் காலனியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை, மாவட்ட கலெக்டர் .கவிதா ராமு, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரைஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
தமிழக அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சி, நீலியம்மன் கோவில், ஆதிதிராவிடர் காலனியில், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இக்கலையரங்கத்தினை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு, தங்களது கலைத் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெ.ஆனந்தன், எம்.பிரேமலதா, வட்டாட்சியர் .சக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் .கை.பழனிச்சாமி, ஊராட்சிமன்றத் தலைவர் .ம.வேலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.