தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை ஒத்த தெருவை சேர்ந்த மோகன் என்பவரது மகன் அவினாஷ்(26), இவரது நண்பர் செட்டிமண்டபம் சவுந்தர்ராஜன் மகன் கணேஷ்(23). இவர்கள் இருவரும் இன்று அதிகாலை பைக்கில், காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக வந்தனர்.
அனந்தமங்கலம் அருகே வந்தபோது பைக் தாறுமாறாக சென்று அருகில் உள்ள ஒரு தேக்குமரத்தில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்து குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குடந்தை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.