Skip to content
Home » கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 13 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 13 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

  • by Authour

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஏழை ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

அதன்படி திருப்பூர் இணை ஆணையர் மண்டலத்துக்குட்பட்ட கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

விழாவையொட்டி கோவில் வளாகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் அந்தந்த மணமக்களின் உறவினர்கள் முன்னிலையில் 13 ஏழை ஜோடிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 13 ஏழை ஜோடிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா மற்றும் மணமக்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கும் விழா திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை தலைமையில்  கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத்துறைகரூர் உதவி ஆணையர்கள் நந்தகுமார் , ஜெயதேவி, ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

இந்துசமய அறநிலையத்துறை கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்துக்கு ரூ.20 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது, அந்த தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தாலிக்கு 4 கிராம் தங்கம் மணமகன் ஆடை, மணமகள் ஆடை, இருவீட்டார் தரப்பில் 20 பேருக்கு உணவு, மாலை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் என ரூ.50 ஆயிரத்திற்கான பொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவில் கோவில் ஆய்வாளர்கள், பணியாளர்கள், கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *