Skip to content
Home » கரூரில் ரத்தசோகை கண்டறியும் முகாம்…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூரில் ரத்தசோகை கண்டறியும் முகாம்…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூர் மாநகராட்சி, பசுபதீஸ்வரர் பொண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் வளரிளம் பெண்களிடையே இரத்தசோகை கண்டறியும் ஆய்வு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கூறும்போது.….  கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 9 வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவியர்களுக்கு உதிரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்படவுள்ளது. வாரம், வாரம் இரும்பு சத்து மாத்திரைகள் மட்டும் வழங்க கூடிய திட்டம் இருக்கிறது. நாட்டிலே முதல் முறையாக நம்முடைய மாவட்டத்தில் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவியர்களின் ஹீமோகுளோபின் அளவுகளை பரிசோதித்து பின் அவர்களுக்கு ஏற்ற வகையில் சிகிட்சை மேற்கொள்ளவும், அவர்களுக்கு இரத்த சோகை நோய் கண்டறியப்பட்டு சிகிட்சை வேற மாதிரி கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதன்

அடிப்படையில் புதுமையான திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம் இதனை தொடர்ந்து பள்ளி சீறார் நலத்திட்ட (ஆர் பி எஸ்கே) மருத்துவர்க்குழு பள்ளிக்கூடங்களில் சென்று குழந்தைகளிடம் இரத்தம் மாதிரி எடுத்து ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு என்று சொல்லப்பட்டு அதன் பின் அவர்களுக்கு ஏற்ற சிகிச்சை அளிக்கப்படும். மேலும், இரத்தசோகை தடுப்பது குறித்தும், அதை குணப்படுத்துவது குறித்தும் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி ஏற்படுத்தப்படும். தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகளுக்கு இரத்தம் எடுப்பதனால் மொத்தம் 26 ஆயிரம் மாணவிகளின் பெற்றோர்களின் அனுமதியை கேட்டறிந்து விண்ணப்பம் தெரிவித்தோம். அதில் 16792 குழந்தைகளின் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவித்து குழந்தைகளிடம் ஒப்புதலும் பெறப்படுகிறது. அதாவது 165 பள்ளிகளில் 125 அரசு பள்ளிகள் 40 தனியார்பள்ளிகள் இந்த இரத்தசோகை கண்டறியும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளபடுகிறது. இப்பணிகள் தொடர்ந்து 15 நாள்கள் அதாவது 12 பள்ளிநாட்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வரை 9250 மாணவிகளுக்கு இரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் புதுமையான முன்னோடி திட்டம் இதன் மூலம் குழந்தைகளுடைய இரத்தசோகை இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அவர்கள் வளரும் காலத்தில் , அதாவது மகப்பேறு காலத்தில் இரத்தசோகை இல்லாத சிறந்த விளைவு ஏற்படும். ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின் படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *