Skip to content
Home » கரூரில் மூன்றரை அடி உயர ஜோடிக்கு டும் டும் டும்

கரூரில் மூன்றரை அடி உயர ஜோடிக்கு டும் டும் டும்

கரூரில் மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று விமரிசையாக திருமணம் நடந்தது.

கரூர் மாநகராட்சி வெங்கமேடு, புதுக் குளத்துப்பாளையம் பகுதியை சார்ந்தவர் ஞானசேகரன் என்கின்ற சசிக்குமார் ( வயது 40). பி.காம் பட்டதாரியான இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். மாற்றுத் திறனாளியான இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வசித்து வருகிறார். சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட இவரால் சராசரி மனிதர்களை போல் எந்த வேலையும் செய்ய முடியாமல் வாழ்ந்து வரும்  நிலையில், அதே உயரத்தில் உள்ள  சாந்தி(40) என்ற பெண் ஒருவர் வணிக வரித்துறையில் பணியாற்றி வருவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரை பார்க்க சென்ற சசிக்குமாருக்கு அவரை பிடித்துப் போக அவரிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வ.உ.சி தெருவை சார்ந்த சாந்திக்கும், சசிக்குமாருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ மாற்றுத் திறனாளிகளான மணமக்களுக்கு புதுக்குளத்துப்பாளையத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் அவர்களை வாழ்த்திச் சென்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும்
பொண்ணும்தான் பேறு
விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு
சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க  சிறப்போடு

வாழ்ந்து சிந்து பாடணும்

என  நாமும் அவர்களை வாழ்த்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *