தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் தனியார் செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை அருகே உள்ளது பிள்ளையார்பட்டி ஊராட்சி, இங்கு தனியார் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் செல்போன் டவர் அமைக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் உதயகுமார் ஆகியோர் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் இருப்பிடம் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில் ஊராட்சி தலைவர் உதயகுமாரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…
- by Authour
