கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் முதல் 24 மணி நேரமாக விடிய விடிய தொடர் போராட்டம் நடத்திய காரணமாக மாணவர்கள் ஹரிதா ஷேக் முகமது மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்து – மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு காவல்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்பட்டு சரி செய்யப்படும் என வடவள்ளி காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை உறுதி அளித்துள்ளார்.
மேலும் கல்லூரி சார்பில் நடத்தப்படும் விசாரணை குழுவில் மாணவர்கள் சார்பாக மாணவர் பிரதிநிதி நிச்சியம் இடம் பெறுவார் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது இவ்வித நடவடிக்கையும் பிற்காலத்தில் எடுக்கப்பட மாட்டாது என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் போராட்டத்தை கைவிட்டனர். தங்கள் போராட்டம் வெற்றி பெற்றது இதை அடுத்து நாளை காலை வழக்கம் போல் கல்லூரி இயங்கும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.