ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பணவிநியோகம், பரிசுப்பொருள் விநியோகம் தொடர்பாக எழுந்த புகார்கள் மேலும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்திய தலைமை துணை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.