Skip to content
Home » அமெரிக்க இளம் நடிகர் மர்ம மரணம்…

அமெரிக்க இளம் நடிகர் மர்ம மரணம்…

  • by Authour

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் குடியிருப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் மர்ம மரணம் அடைந்து கிடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் சென்று விசாரித்ததில் அவர், பிரபல இளம் நடிகரான ஜேன்சன் பனெட்டீர் என தெரிய வந்தது. அவர், பிரபல நடிகையான ஹெய்டன் பனெட்டீரின் சகோதரர் ஆவார். ஜேன்சனின் மரணம் பற்றிய தகவலை ஹெய்டனின் பிரதிநிதியான கேசி கிச்சன் என்பவர் சி.என்.என்னுக்கு அளித்த தகவலில் உறுதி செய்து உள்ளார். இதுபற்றி ஆரஞ்ச்டவுன் காவல் துறை வெளியிட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில், நாங்கள் செல்லும் முன்பே ஜேன்சன் மரணமடைந்து விட்டார். அப்போது அவரது நண்பர் ஒருவர் ஜேன்சனை காப்பாற்ற முயற்சித்தபடி காணப்பட்டார். ஜேன்சனுடன் வர்த்தக விசயம் பற்றி பேசுவதற்காக அந்த நண்பர் காத்திருந்து உள்ளார். ஆனால், ஜேன்சன் வராத நிலையில், அவரது குடியிருப்புக்கு நண்பர் சென்று உள்ளார். அப்போது ஜேன்சன் நாற்காலி ஒன்றில் எதுவும் பேசாதபடி அமர்ந்து இருந்து உள்ளார் என அறிக்கை தெரிவிக்கின்றது. அதற்கு முந்தின நாள் இரவு ஜேன்சனின் தந்தை ஆலன் தொலைபேசியில் அவருடன் பேசும்போது, நன்றாக பேசியுள்ளார் என போலீசில் ஆலன் கூறியுள்ளார்.

நியூயார்க்கின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த ஜேன்சன், சிறு வயது முதலே நடிக்க தொடங்கி உள்ளார். தனது சகோதரியுடன் டைகர் குரூஸ் என்ற பிரபல டிஸ்னி சேனல் தொடரில் 2004-ம் ஆண்டு ஜேன்சன் நடித்து உள்ளார். அதன்பின்னர் ஈவன் ஸ்டீவன்ஸ், தி எக்ஸ்.எஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடரிலும் நடித்து உள்ளார். தி போர்ஜர், தி மார்சியல் ஆர்ட்ஸ் சைல்டு, சம்மர் பார்எவர் மற்றும் லவ் அண்டு லவ் நாட் உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து உள்ளார். நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர், தொழில் முனைவோர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முக தன்னை கொண்டவர் என தன்னை பற்றி டுவிட்டரில் அவர் விவரித்து உள்ளார். தி வாகிங் டெட் மற்றும் ஐஸ் ஏஜ்: தி மெல்ட்டவுன் உள்ளிட்ட தொடர்களில் நடித்தது அவரை பிரபலமடைய செய்தது. தொடர்ந்து, ஜேன்சனின் மரணத்திற்கான உண்மையான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *