அரியலூர் மாவட்டத்தில் நேற்று 48 மில்லி மீட்டரும், திருமானூரில் 23 மில்லி மீட்டரும், ஜெயங்கொண்டத்தில் 22 மில்லி மீட்டரும், செந்துறையில் 2 மில்லி மீட்டரும், ஆண்டிமடத்தில் 7 மில்லி மீட்டரும் மழையானது பதிவாகின. இந்நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வந்தது அவ்வப்போது வெயிலின் தாக்கமும் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் மதியத்திற்கு மேல் லேசாக பெய்ய ஆரம்பித்த மழை படிப்படியாக மிதமான மழையாக மாறி அரியலூர், திருமானூர், தா.பழூர் பகுதிகளை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது தொடர்ந்து செய்துவரும் மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு இம்மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.