குழந்தைகளை படிக்கவைத்து பெரிய பதவிகளில் அமரவைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோருக்கும் உண்டு. இதனால் மழலைச்சொல் மாறாத குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.2வயது ஆகி விட்டாலே பிளேஸ்கூல் அனுப்புகிறார்கள். 3வயதில் பிரிகேஜி என்றும், 4வயதில் கேஜி வகுப்பு என்றும் அனுப்புகிறார்கள். இதற்காகவே தனியார் கல்வி நிறுவனங்கள் பெட்டிக்கடைகள் போல பள்ளிகளை திறந்து வைத்துகாத்திருக்கிறார்கள்.
5வயதை தொட்டவுடன் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் வலுக்கட்டாயமாக திணித்து விடுகிறார்கள். இந்தநிலையில் மத்திய கல்வித்துறை இன்று மாநில மற்றும் யூனியன் பிரதேசகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் 6வயது முடிந்த குழந்தைகளைத்தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும்.
3வயதுமுதல் 6வயது வரையிலான குழந்தைகள் மழலையர் பள்ளியில் படிப்பதை மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளது.