கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இதில் சிலர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு உணவு தங்கும் இடம் போன்ற வசதிகளுக்கு ஆண்டுக்கு ஒரு ஒருக்கு 3 ஆயிரம் வரையில் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் குறிப்பாக பெண்கள் தங்கி பயில கண்ணம்மா, பெரியார், வாசுகி என்ற மூன்று விடுதிகள் உள்ளன. ஒரு விடுதயில் 400 நபர்கள் என்ற விதம் 1500 நபர்கள் உள்ளனர். மூன்பு மூன்று விடுதிக்குள் தனித்தனியாக சமையல் செய்து கொடுத்து வந்தனர். தற்போது ஒரு வருடமாக மூன்று விடுதிக்கும் ஒரு இடத்தில் சமையல் செய்து கொடுத்து வருகின்றனர் . இதனால் மாணவிகளுக்கு தினமும் கொடுக்கப்பட்டும் உணவு தரமானதாக இல்லை எனவும், இது குறித்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதம் மட்டும் சரியான முறையில் சமைத்து கொடுத்ததாகவும் தற்போது மீண்டும் பழைய நிலவில் தரமற்ற உணவு வழங்குவதாக மாணவிகள் நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
அதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதா நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் 80 கற்கும் மேற்பட்ட கண்ணம்மா விடுதி மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு அமர்ந்து கையில் பதாதைகள் ஏந்திய படி போராட்டம் செய்தனர். தரமான உணவு , சுகாதாரமற்ற கழிப்பிடம் , சரியான முறையில் தண்ணீர் வினியோகம் செய்வதில்லை என்றும் கல்லூரி நிர்வாகத்தை, வார்டன் , உணவு காண்டிரைக்கடரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடவள்ளி காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை மாணவிகளிடம் பேசினார். கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். அதனால் மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். மாணவிகளை பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை ஆழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.