Skip to content
Home » இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் உள்ள தனியார் மஹாலில் இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலிருந்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…

அனைத்து அமைப்புகளும் ஏக மனதாக ஒரு குழுவை ஆரம்பித்து அந்த குழுவின் வாயிலாக மக்களிடத்தில் இஸ்லாமியர்களின் ஒற்றுமையின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமுதாயத் தலைவர்கள் ஒன்றினைய மாட்டார்கள் என்பதை அறிந்த பிறகும் இறுதி முயற்சியாக ஒருமுறை மட்டும் சந்திக்கலாம் என்று தீர்மானம் அனைவருடைய ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சிறைவாசிகள் விடுதலையில் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

நடந்து முடிந்த தேர்தலில் உலமா சபை ஜும்மா மேடைகளை பயன்படுத்தி நடப்பு அரசுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகளை அதிகமாக பெற காரணமாக சிறைவாசி விடுதலையும் மக்களிடம் கூறி உலமா சபை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை சையது….

திராவிட கட்சிகள் முஸ்லிம் மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி அவர்களின் கோரிக்கையை செவி சாய்க்காமல் இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். முஸ்லிம்களுடைய விகிதாச்சாரத்தின் அடிப்படையிலே அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் இந்த அரசியல் கட்சிகளால் நாங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளோம், என்று இந்த சமூகம் நம்புகிறது. பாசிச செயல்களை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மூலமாக தெரியப்படுத்திக் கொள்கிறோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும். உண்மையான முஸ்லிம் தலைவர்கள், ஜமாத் பெரியவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இல்லை என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓட்டு வங்கி தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரியபடுத்துகிறோம் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *