Skip to content
Home » புதுக்கோட்டையில் பஸ் மீதுகார் மோதல் … டிரைவர் பலி

புதுக்கோட்டையில் பஸ் மீதுகார் மோதல் … டிரைவர் பலி

  • by Authour

புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  சிப்காட் அருகே  இன்றுகாலை வேகமாக வந்த ஒரு கார்  அந்தவழியாக வந்த அரசு டவுன் பஸ் மீது பயங்கரமாக மோதியது.இதில் கார் டிரைவர் அந்த இடத்திலேயே இறந்தார்.

விபத்தில் கார் நொறுங்கியது.இதில் காரில் இருந்த மற்ற 6 பேரும் படுகாயமடைந்தனர்.உடனடியாக அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்குகொண்டு செல்லப்பட்டனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்தவர் மற்றும் காயமடைந்தவர்களைப்பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *