கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலத் தொடக்கமாக நடைபெற்ற சாம்பல் புதன் வழிபாடு உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று நடைபெற்றது ; நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர்.
இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீப்பதற்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலக முழுவதும்
உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
அதன்படி கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலத் தொடக்கமாக சாம்பல் புதன் வழிபாடு வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். சாம்பல் புதன் நாளான இன்று கிறிஸ்தவா்கள் அதிலும் குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தங்களது நெற்றியில் சாம்பல் பூசி இயேசுவை மனமுருகி வழிபட்டனர். இதுபோல திருச்சி,தஞ்சை, பூண்டி உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவஆலயங்களிலும் இன்றுசாம்பல் புதன் வழிபாடு நடந்தது.